2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அண்ணா சிலையடி இளைஞர் அணி சம்பியன்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரத்தினம் கனகராஜ்


இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழகம் 18 வயதுக்;குட்பட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்திய கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அண்ணா சிலையடி இளைஞர் அணி சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் அண்ணா சிலையடி இளைஞர் அணியை எதிர்த்து வல்வெட்டித்துறை கருணாகரன் அணி மோதியது.

போட்டியின் நேரத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் அண்ணா சிலையடி இளைஞர் அணி 3.2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

சிறந்த ஆட்ட நாயகன், தொடர் ஆட்ட நாயகன், சிறந்த கோல் காப்பாளர் ஆகிய விருதுகளை அண்ணா சிலையடி இளைஞர் அணியைச் சேர்ந்த முறையே, என்.பிருந்தாபன், கே.கவிவரன், எஸ்.விஜிதரன் ஆகியோரும், சிறந்த நன்னடத்தை வீரராக இமையாணன் இளைஞர் அணியை சேர்ந்த என்.நிரூசன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .