2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆண், பெண் கூடைப்பந்தாட்ட அணிகள் வெற்றி

Thipaan   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம்  மாவட்டங்களிடையே நடாத்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டிகளில், மட்டக்களப்பு மாவட்ட ஆண், பெண் இரு அணிகளும் வெற்றியீட்டின.

இப்போட்டிகள் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்றன.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட ஆண்; மற்றும் பெண் கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையே இப்போட்டிகள் நடைபெற்றன.

இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு- திருகோணமலை மாவட்ட அணிகள்  மோதி மட்டக்களப்பு அணிகள் வெற்றிபெற்றன.
இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ். விஜயநிதன், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்வரன் மற்றும் விளையாட்டுத் திணைக்கள திட்ட உத்தியோகத்தர் எம். சி. எம். அத்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .