2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இறுதி போட்டிக்கு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி தெரிவு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

ஸ்ரீலங்கா கிரிக்கட் மற்றும் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் ஆகியன இணைந்து அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடத்தும் 17 வயதுக்குட்பட்ட கடினபந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கலந்தகொள்ளும் வாய்ப்பினை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி கிரிக்கட் அணி பெற்றுள்ளது.

பெல்வத்தை சீனிக்கூட்டுத்தாபன மைதானத்தில்  நடைபெற்ற 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட்ட போட்டியின் அரையிறுதிப் போட்டியில் பலாங்கொடை ஆனந்த மத்திய கல்லூரியை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி எதிர்த்தாடியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பலாங்கொட ஆனந்த மத்திய கல்லூரி 44 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணி 39 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று 3 விககெட்டுக்களினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

வெற்றிபெற்ற மாணவர்களையும் பயிற்சி வழங்கிய விளையாட்டு பொறுப்பாசிரியர் அலியார் பைஸர் உள்ளிட்ட விளையாட்டுத்துறை ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன், விளையாட்டு அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும்  நலன் விரும்பிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .