2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

குத்துச்சண்டை போட்டியில் மட்டக்களப்பு மாணவர்களுக்கு வெள்ளிப்பத்தக்கம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின் குத்துச்சண்டை போட்டியில்,  மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள் கடந்த 4 ஆம் திகதி முதல் கொழும்பில் இடம்பெற்று வருகிறது.

கொழும்பு அசோகா வித்தியாலயத்தில் செவ்வாய்கிழமை (16) குத்துச்சண்டை போட்டி இடம்பெற்றது.

17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் என்.பிராஷ் 58 கிலோ போட்டியிலும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் என்.நிசோத் 55 கிலோ போட்டியிலும் இப்பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியர் எம்.பி.குகாதரனின் வழிநடத்தில் பயிற்றுவிப்பாளர் வி.திருச்செல்வம் இம் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி போட்டிக்கு தயார்படுத்தினார்.

மெய்வல்லநர் போட்டிகள் இம் மாதம் 29ஆம் திகதி முதல் ஐப்பசி மாதம் 5ஆம் திகதி வரை கொழும்பு சுகந்ததாஸா விiயாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .