2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மென்பந்து கிரிக்கெட் போட்டியில் மாவட்ட செயலக அணி செம்பியன்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்
, ஏ.எம்.அப்துல் பரீத்

திருகோணமலை அரசாங்க அதிபர் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் மாவட்ட செயலக அணி செம்பியனாகியுள்ளது.

மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில், பிரதேச செயலக அணிகள் 11ம், மாவட்ட செயலக அணியும் பங்கு கொண்டன.

இறுதிப்போட்டியில் பட்டணமும் சூழலு பிரதேச செயலக அணியை மாவட்ட செயலக அணி எதிர்கொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மாவட்ட செயலக அணி 10 பந்து பரிமாற்ற நிறைவில் 2 இலக்குகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கு.சக்திகுமரன் 63, பிரசன்னா ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களைபெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்கு களம் புகுந்த பட்டணமும் சூழலும் அணியினர் 10 பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர. இதன் மூலம் மாவட்ட செயலக அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிணங்களை வழங்கிவைத்தார். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .