2025 ஜூலை 09, புதன்கிழமை

மன்னாரில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் விளையாட்டுக்கழங்களுக்கிடையில் 10 ஓவர் கொண்ட கிரிக்கெட்  சுற்றுப்போட்டி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.

குறித்த போட்டியினை, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

9 அணிகள் கலந்து கொள்ளும் இச்சுற்றுப்போட்டி 3 பிரிவுகளாக இடம் பெறவுள்ளது. முதல் சுற்று லீக் முறையிலும் அதிலிருந்து 06 அணிகள்  தெரிவு செய்யப்பட்டு நொக்கோட் முறையில் போட்டிகள் இடம்பெறும்.

இந்நிலையில் முதல் போட்டி ஸ்ரார் ஈகிழ் விளையாட்டுக்கழகத்துக்கும் மன்னார் சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகத்துக்கும் இடையில் இடம் பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகம், முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர்.

இதன்போது சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகம் 10 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

எதிர்த்து துடுப்பாடிய ஸ்ரார் ஈகிழ் விளையாட்டுக்கழகம் 6.1 ஓவர்களில் விக்கட்டுக்கள் எவையும் இழக்காத நிலையில் 101 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றனர்.

இப்போட்டி தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) வரை இடம் பெறவுள்ளது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .