2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி

Thipaan   / 2014 செப்டெம்பர் 20 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில்  முதல் தடவையாக சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சியளிக்கும்  நிகழ்வு, கல்லடி ரிவேரா ரிசோட் விருந்தினர் விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் இன்று சனிக்கிழமை (20) நடைபெற்றது.

தாண்டவன்வெளில் உள்ள பியுட்சர் மைன் கின்டர்காடன் எனும் சிறுவர்களை விளையாட்டுடன் கூடிய கல்வியை கற்பிக்கும் சிறுவர் நலன் காப்பு நிலையத்தால் இப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு உத்தியோகத்தரும் நீச்சல் பயிற்சிவிப்பாளருமான எஸ். சோமஸ்காந்தன் சிறுவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்.

பயிற்சியின் இறுதியில் ஒவ்வோரு அடைவு மட்டத்ததையும் பெறும் சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் வி. மனோகரன் தெரிவித்தார்.
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .