2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்கள் இணை வெற்றியாளர்களாக தெரிவு

Thipaan   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாகாண விளையாட்டு விழாவில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்கள் 225 புள்ளிகள்பெற்று இணை வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டன.

மூன்றாம் இடத்தை அம்பாறை மாவட்டம் (145 புள்ளி)  பெற்றுக் கொண்டுள்ளது.

இவ்விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகளும் விருது வழங்கும் நிகழ்வும் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றன.

கிழக்கு மாகாண சுகாதார ,விளையாட்டு அமைச்சர் எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.

ஆண்களுக்கானமெய்வல்லுநர் நிகழ்வுகளில் அம்பாறை மாவட்டம் 142 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும். 111 புள்ளிகளைப் பெற்ற திருகோணமலை மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 73 புள்ளிகள் பெற்ற மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

பெண்களுக்கான  மெய்வல்லுநர் நிகழ்வுகளில்  அம்பாறை மாவட்டம் 189 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும்,  மட்டக்களப்பு மாவட்டம் 59 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும். திருகோணமலை மாவட்டம்  48 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜே.எம்.லாகீர், மூதூர் பிரதேச  சபை தலைவர எம்.ஹாரிஸ், கிண்ணியா நகர சபை தலைவர் மருத்துவர் எம்.ஹில்மி கிழக்கு மாகாணசுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.கருணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .