2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி சவால்கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான தெரிவுப்போட்டிகள்

Thipaan   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மண்முனைப் பற்றுப் பிரதேசத்திலிருந்தும்  காத்தான்குடி பிரதேசத்திலிருந்தும், ஜனாதிபதி  சவால்கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கு விளையாட்டுக் கழகங்களைத் தெரிவு செய்வதற்கான தெரிவுப்போட்டிகள், ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (20)  நடைபெற்றன.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் அணிக்கு 6 கொண்ட பேர் 5 ஓவர்கள்  மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி  சவால்கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கு, பிரதேச மட்டத்திலான விளையாட்டுக் கழகங்களைத் தெரிவு செய்யும் தெரிவுப்போட்டிகள்  மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அங்கமாகவே மேற்படி தெரிவுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகள் யாவும், தேசிய இளைஞர் சேவை மன்றம், நீலப்படையணி,  கிழக்கு அபிவிருத்தி மன்றம், இலங்கை இராணுவம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெற்று வருகின்றன.

இப்பிரதேசமட்ட தெரிவுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில், இலங்கை இராணுவத்தின் 231ஆவது கட்டளைத் தளபதி பாலித்த பெணாண்டோ,  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,  தேசிய இளைஞர் சேவை மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா, மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ்,  மாவட்ட இளைஞர் சேவை  அதிகாரிகள், கலாராணி, நிஷந்தி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .