2025 ஜூலை 09, புதன்கிழமை

புத்தளம் லிவர்பூல் அணி வெற்றி

Thipaan   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் லிவர்பூல் மற்றும் ட்ரிபல் செவன் அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்ட போட்டியில் லிவர்பூல் அணிவெற்றி பெற்றது.  இப்போட்டி, மாலை புத்தளம் சாகிறா தேசிய பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்றது.

புத்தளத்தில், புத்தளம் கால்ப்பந்தாட்ட சங்கம் தொடராக நடாத்தி வரும்  புதிய கால்ப்பந்தாட்ட தொடர் ஆட்டம் ஒன்றிலேயே இவ்விரு அணிகளும் மோதிக்கொண்டன.

முதல் பாதி  ஆட்டத்தில் லிவர்பூல் அணியின் முன்கள வீரர் ஏ.எம்.நசீம் தனது அணிக்கான முதலாவது கோலினை பெற்றார்.

தொடர்ந்து அவ்வணிக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி உதையை ஏ.எம்.நசீம் கோலாக்கினாலும் லிவர்பூல் அணியின் மற்றுமொரு வீரர் அந்த பந்துக்கு முன்னேறியதால் அந்த கோல் நடுவரால் இரத்து செய்யப்பட்டது.

எனினும் இரண்டாவது பாதியில் லிவர்பூல் அணியின் வீரர் ஏ.எஸ்.எம். தஸ்லீம் மற்றுமொரு கோலை அதிரடியாக அடித்ததன் மூலம் அவ்வணி 02 கோல்களினால் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் போது ட்ரிபல் செவன் அணியின் வீரர் எம்.ஹஸ்மத் பிரதம நடுவரினால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
நடுவர்களாக எம்.எஸ்.எம். ஜிப்ரி, ஏ.ஓ.எம் அசாம், எம்.ஏ.எம். பஸ்ரின் ஆகியோர் கடமையாற்றினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லிவர்பூல் அணி 03 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.      




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .