2025 ஜூலை 09, புதன்கிழமை

பீ பிரிவுக்கான கால்பந்தாட்ட லீக் போட்டிகள் ஆரம்பம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியா கால்பந்தாட்ட சங்கம் வருடந்தோரும் நடாத்தும் பீ பிரிவுக்கான கால்;பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபை உறுப்பினரும் இலங்கை கால்பந்தாட்ட சங்க உப தலைவரும் நுவரெலியா கால்பந்தாட்ட சங்க தலைவருமான எல்.நேருஜி தெரிவித்தார்.

இந்த சுற்றுப் போட்டியில் நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட எட்டு விளையாட்டு கழகங்கள் பங்குபற்றுகின்றன.
ஹய்பொரஸ்ட், மூன்பிலேன், எவன் யூத், கல்வேஸ், பாரத், சன்பேட்ஸ், வாணி, பச்சை விளையாட்டுக்கழகம் ஆகிய எட்டு கழகங்கள் போட்டியில் லீக் அடிப்படையில் போட்டியிடவுள்ளன.

கடந்த வருடம் சீ பிரிவில் போட்டிகளில் பங்குபற்றிய ஹய்பொரஸ்ட், மூன்பிலேன் ஆகிய இரண்டு விளையாட்டுகழகங்களும் இம்முறை பீ பிரிவில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

அதேபோல கடந்த வருடம் ஏ பிரிவு போட்டிகளில் பங்குபற்றிய வாணி விளையாட்டு கழகமும், கல்வேஸ் விளையாட்டுக்கழகமும் கடந்த வருடம் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் குறைவான புள்ளிகளை பெற்று கடைசி இரண்டு இடங்களை பெற்றுக் கொண்டதன் காரணமாக அவை இம்முறை பிரிவு பீக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை நுவரெலியா நகர முதல்வர் கிண்ணத்துக்கான அறை இறுதிப் போட்டியும் இறுதிப் போட்டியும் இந்த வாரம் நடைபெறவுள்ளன. இதில் யங்பேட்ஸ் விளையாட்டுக்கழகமும் எஸ்.ஓ.எஸ்.விளையாட்டுக்கழுகமும் ஒரு அறையிறுதி போட்டியிலும் மற்றைய அறை இறுதிப் போட்டியில் ரெட்வின்ஸ் விளையாட்டுக்கழகமும் ரேன்ஜஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொள்ளவுள்ளன.

இதில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் போட்டியிடவுள்ளன. கடந்த ஐந்து வருடங்களாக நுவரெலியா யங்பேட்ஸ் விளையாட்டுக்கழகம் தொடர்ந்து நகர முதல்வர் கிண்ணத்தை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த அனைத்து போட்டிகளுக்குமான ஏற்பாடுகளை நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் ஏ.மகேந்திரன் மேற்கொண்டுள்ளார். போட்டிகள் யாவும் நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இவ்வருடம் நடைபெறவுள்ள கால்;பந்தாட்ட போட்டிகளுக்கான நடுவர்களாக நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் கடமையாற்றவுள்ளதாகவும் தேவை ஏற்படும் பட்சத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து நடுவர்களை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போட்டிகளின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நுவரெலியா பொலிஸசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேறகொள்வார்கள் எனவும் எல்.நேருஜி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .