2025 நவம்பர் 19, புதன்கிழமை

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வீரசூரி விருது

George   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தால் முதன்முறையான அறிமுகப்படுத்தப்பட்ட வீரசூரி விருதை, இம்முறை நான்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம், ஞாயிற்றுக்கிழமை(21) தெரிவித்தது.

வடமாகாண பாடசாலைகளின் உடற்கல்வி ஆசிரியர்களாக கடமையாற்றும் இவர்கள், பாடசாலை மாணவர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்து தேசிய மட்ட போட்டிகளில் மாணவர்கள் பதக்கங்கள் பெறுவதற்கு காரணமாகவிருந்தமைக்காக இந்த விருது வழங்கப்படுகின்றது.

உடுவில் மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரான ப.தர்மகுமாரன், புதுக்குடியிருப்பு இரணைப்பால றோமன் கத்தோலிக்க பாடசாலை க.சசிக்குமார், கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தை சேர்ந்த எஸ்.ஜெயகரன், வவுனியா சுந்தரபுரம் மகா வித்தியாலய ஆசிரியர் இ.டபிள்யூ.ஜெயநேசன் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான விருதுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை உரும்பிராய் இந்துகல்லூரியில் இடம்பெறும் ஊரெழு றோயல் மற்றும் ஞானமுருகன் அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்ட இறுதிப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின் போது வழங்கப்படவுள்ளதாக சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X