2025 ஜூலை 09, புதன்கிழமை

ஞானமுருகனின் கோல் மழை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்திலுள்ள அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் ஞானமுருகன் அணி 6:0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியீட்டியது.

24 கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இந்த போட்டியின் இறுதிப் போட்டி, உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.

அரையிறுதி போட்டிகளில் ஊரெழு றோயல் அணி 8:1 என்ற கோல் கணக்கில் நவஜீவன்ஸ் அணியையும், ஞானமுருகன் அணி 4:2 என்ற கோல் கணக்கில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணியையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிப்போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணி மோதியது.

போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணிகளும் நிதானமான விளையாடின. முதல் பாதியாட்டம் நிறைவு பெறும் வேளையில் ஞானமுருகன் அணியின் சிவஞானம் லஸ்ரின் முதலாவது கோலை போட்டார்.

முதல்பாதி ஆட்டத்தில் ஞானமுருகன் அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியாட்டத்தில் ஞானமுருகன் அணி முழுமையான ஆதிக்கத்தை மைதானத்தில் நிலைநாட்டியது.

ஞானமுருகன் அணி, அடுத்தடுத்து 5 கோல்களை இரண்டாவது பாதியாட்டத்தில் போட்டது. றோயல் அணியால் எவ்வித கோல்களையும் பெறமுடியவில்லை. இறுதியில் 6:0 என்ற கொல் கணக்கில் ஞானமுருகன் அணி வெற்றிபெற்று சம்பியனாகியது.

ஞானமுருகன் அணியின் சிவஞானம் லஸ்ரின், வரதராஜா தவரூபன் ஆகியோர் தலா 2 கோல்களையும், இரவீந்திரன் பார்த்தீபன், இரவீந்திரன் ஜெகதீஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றனர்.

இறுதிப்போட்டியின் நாயகனாக ஞானமுருகன் அணியின் சிவஞானம் லஸ்ரினும், சிறந்த கோல் காப்பாளராக சந்திரதாஸா சயந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .