2025 ஜூலை 09, புதன்கிழமை

'கல்முனை சாஹிரா மாணவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்'

Kogilavani   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.கே.றஹ்மத்துல்லா


'தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று கல்முனை மண்ணுக்கு பெருமை சேர்த்த கல்முனை ஸாகிரா மாணவர்கள் பாராட்டப்படக் கூடியவர்கள்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கல்முனை ஸாகிரா கல்லூரி தேசிய பரீட்சை அடைவு மட்டங்களில் மாத்திரமின்றி விளையாட்டுப் போட்டிகளிலும் பல சாதனைகளைப் படைத்த படைசாலையாகும்.

கல்வித்துறையில் பல துறைசார்ந்தவர்களை உருவாக்கி பெருமை கண்டுள்ள ஸாகிராக் கல்லூரி விளையாட்டுத்துறையிலும் பல சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது.

அந்தவகையில், ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை மற்றும் அகில இலங்கை பாடசாலைக் கிரிக்கட் சம்மேளனம் ஆகியன இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில்  17 வயதுக்குட்பட்ட மாணவர்களுகான கடினபந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்;பாணம் மத்திய கல்லுரியை எதிர்கொண்டு வெற்றியீட்டி இச்சுற்றுப்போட்டியின் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் இந்த வெற்றி முழு கிழக்கு மாகாணததுக்கும் குறிப்பாக கல்முனை மண்ணுக்கும் கிடைத்த கௌரவமாகும்.

இவ்வாறு இந்த மண்ணுக்கும் பாடசாலைக்கும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்த இம்மாணவர்கள் பாராட்டப்படக் கூடிவர்கள். 

வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் கௌரவிப்புக்களும் மேலும் இம்மாணவர்களைச் சாதணைப் படைக்க ஊக்கப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் இச்சாதனையாளர்களை உருவாக்கிய ஆசிரியர் அலியார் பைசர், பாடசாலை அதிபர், பாடசாலைச் சமூகம் மற்றும் இம்மாணவர்களின் பெற்றோர்களையும் வாழ்த்திப் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .