2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சதுரங்க போட்டி முடிவுகள்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மு.இராமசந்திரன்

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சதுரங்க குழுப்போட்டி கடந்த இரு தினங்களாக (20,21) ஆம் திகதிகளில் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.

ஹட்டன் சதுரங்க கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி இப்போட்டியில் 200 மாணவர்கள் வரையில் கலந்துகொண்டனர்.

10 வயதுக்;கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கிடையிலான போட்டியில் முறையே 1ம் 2ம் 3ம் இடத்தினை ஹைலவெல் இன்டர்நேஷனல் பாடசாலை, வெப்ஸ்டார் இன்டர்நேஷனல் பாடசாலை,  ஹைலவெல் இன்டர்நேஷனல் பாடசாலை பெற்றுக்கொண்டன.

12 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கிடையிலான போட்டியில் முறையே 1ம் 2ம் 3ம் இடத்தினை ஹைலன்ட்;ஸ் கல்லூரி, ஹைலன்ட்;ஸ் கல்லூரி, என்பீல்ட் த.ம.வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.

14 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கிடையிலான போட்டியில் முறையே 1ம் 2ம் 3ம் இடத்தினை ஹைலன்ட்;ஸ் கல்லூரி, என்பீல்ட் த.ம.வித்தியாலயமும், ஹைலன்ட்;ஸ் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.

18 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கிடையிலான போட்டியில் முறையே 1ஆம் 2ஆம்; இடத்தை என்பீல்ட் த.ம.வித்தியாலய மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
 
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும்  ஹட்டன் சதுரங்க கல்வி கழகத்தின் தலைவர்  டி.பத்மநாதனினால்; வழங்கிவைக்கப்பட்து.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .