2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வேலணை ஐயனார் ஏ அணி சம்பியன்

George   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


ஊர்காவற்றுறை தம்பாட்டி காந்திஜி விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 9 பேர் கொண்ட கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வேலணை ஐயனார் ஏ அணி சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியில் தீவகத்தை சேர்ந்த 17 கால்ப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியதுடன், போட்டிகள் தம்பாட்டி காந்திஜி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வந்தது.

தொடர்ந்து இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை(21) இடம்பெற்றதுடன், இறுதிப்போட்டியில் வேலணை ஐயனார் ஏ அணியை எதிர்த்து வேலணை ஐயனார் பி அணி மோதியது.

போட்டி ஆரம்பமாகிய முதல் இரண்டு அணிகளும் கோல் போடும் முயற்சியில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட போதிலும் கோல் எதனையும் பெறமுடியவில்லை. முதல்பாதியாட்டம் கோல் எதனையும் பெறாத நிலையில் முடிவுற்றது.

இரண்டாவது பாதியாட்டத்தில் வேலணை ஐயனார் ஏ அணி இலவகமாக ஒரு கோல் பெற்று முன்னிலை பெற்றது.

இறுதியில் வேலணை ஐயனார் ஏ 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .