2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'கல்முனை ஸாஹிராக் கல்லூரி கிரிக்கெட் அணியினரை பாராட்டுகின்றேன்'

Kogilavani   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


'பிறந்த மண்ணையும் பாடசாலையின் பெயரையும் தேசிய ரீதியில் புகழ் பெறச்செய்த கல்முனை ஸாஹிராக் கல்லூரி கிரிக்கெட் அணியினரை பாராட்டுகின்றேன். அகில இலங்கை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியனானது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது' என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை மற்றும் அகில இலங்கை பாடசாலைக் கிரிக்கட் சம்மேளனம் ஆகியன இணைந்து யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில்  17 வயதுக்குட்பட்ட மாணவர்களுகான கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நடத்தியது.

இறுதிப்போட்டியில் யாழ்;பாணம் மத்திய கல்லூரியை கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணியினர் எதிர்கொண்டு வெற்றிபெற்று இச்சுற்றுப்போட்டியின் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணியினருக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'எமது பிரதேசத்தில் விளையாடுவதற்கு போதிய வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானங்கள் இல்லாத போதும் கல்முனை ஸாஹிராக் கல்லூரி இன்று இச்சுற்றுப்போட்டியில் அகில இலங்கை ரீதியில் சம்பியன் பட்டம் பெற்றிருப்பது நமது பிரதேசத்திற்குக் கிடைத்த கௌரவமாகும்.

ஸாஹிராக் கல்லூரியின் வரலாற்றில் இதுவும் ஒரு மைல்கல்லாகும். இந்தப் பாடசாலையின் பழைய மாணவர் என்ற வகையிலும் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றறேன்.

திறமைகளை முழுமையாக வெளிக்காட்டி வெற்றிபெற்று பாடசாலையின் பெயரையும் பிறந்த மண்ணையும் தேசிய ரீதியில் புகழடையச் செய்த நமது வீரர்களை பாராட்டுகின்றேன்.

அத்தோடு இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த பயிற்சியாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர் குழாம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சபை உள்ளிட்ட அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

கல்முனை ஸாஹிரா கல்லூரி கல்விக்குப் புறம்பாக விளையாட்டு  போட்டிகளில்  பல சாதனைகளைப் படைத்த படைசாலையாகும்.

இந்த வருடம் எனது நிதியில் கூடுதலான நிதிகளை விளையாட்டுத் கழகங்களின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கியுள்ளேன்.

அத்தோடு கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இரு மைதானங்களை அமைப்பதற்காக 1 கோடி ரூபாவுக்கு மேல் நிதிகளை ஒதுக்கீடு செய்து இவ்விரு மைதான அபிவிருத்தி வேலைகளும் விரைவாக இடம்பெற்று வருகின்றன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .