2025 ஜூலை 09, புதன்கிழமை

உடல் திறன் விளையாட்டு போட்டி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட முன்பள்ளி சிறார்களின் உடல் திறன் விளையாட்டு விழா வியாழக்கிழமை (25) மாலை வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பழுகாமம் முன்பள்ளி அசிரியை திருமதி.க.உருத்திரமூர்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல், போரதிவுப்பற்று பிரதே சபை செயலாளர் சோ.குபேரன், வேள்ட் விசன் லங்கா நிறுவனத்தின் களுவாஞ்சிகுடி பிராந்திய முகாமையாளர் எட்வின் ரணில் உட்பட அதிகாரிகள், பெற்றார்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொணடனர்.

போரதிவுப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் 6 முன்பள்ளிகளைச் சேர்ந்த 164 சிறார்கள் இதில் பங்கேற்றனர்.

இதன்போது ;சிறரார்கள் ஒன்றிணைந்து, உடற்பயிற்சிக் கண்காட்சி, தாராநடை, முயல் ஓட்டம், சமநிலை ஓட்டம், நீர் நிரப்புதல், பந்து வீசுதல், நிறக்கொடி சேகரித்தல், சொல் அட்டை பொருத்துதல், பலூன் உடைத்தல், தடைதாண்டல், பழம் சேகரித்தல், மிட்டாய் ஓட்டம், போன்ற பல உடல் திறன் விளையாட்டுக்களில் ஈடுபட்டனர்.  



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .