2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வெற்றிக்கிண்ணம் மாவட்ட செயலாளரிடம் கையளிப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா

வடமாகாண மாவட்டங்களுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சம்பியனாகிய யாழ்.மாவட்ட அணியின் வெற்றி கேடயத்தை மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆர்.மோகனதாஸ், யாழ்.மாவட்ட செயலாளரிடம் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்தார்.

இந்நிகழ்வு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்றது.

வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையிலான பெரு விளையாட்டு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் வடமாகாண மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இடம்பெற்றது.

இதில் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து யாழ்.மாவட்ட அணி சம்பியனாகியிருந்ததுடன், இரண்டாமிடத்தை வவுனியா மாவட்ட அணி பெற்றுக்கொண்டது.

சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்ட யாழ்.மாவட்ட அணிக்கான வெற்றிக்கிண்ணம் மாவட்ட செயலாளரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .