2025 நவம்பர் 19, புதன்கிழமை

யாழ். பல்கலைக்கழக கரம் அணி சம்பியன்

Thipaan   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ்ப்பாண பல்கலைக்கழக கரம் அணியினரால் ஒழுங்கமைக்கப்பட்ட, அழைக்கப்பட்ட கழகங்களுக்கான  ஆண்களுக்கான கரம் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கரம் அணி சம்பியனாகியது.

செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற இந்த போட்டியில் அழைக்கப்பட்ட 6 கழகங்களின் ஒற்றையர் மற்றும் இரட்டையர்  அணிகள் பங்குபற்றின.

இறுதிப்போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணியினரும் பரியோவான் கல்லூரி அணியினரும் மோதிக்கொண்டனர்.  முதல் மூன்று ஒற்றையர் ஆட்டத்திலும் யாழ். பல்கலைக்கழக அணியினர் வெற்றிபெற்று வெற்றி கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டனர்.

மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில், ஸ்ரீ காமாட்சி அணியினரும் கே.சி.சி.சி அணியினரும் மோதிக் கொண்டனர். இதில் முதல் மூன்று சுற்றுகளையும் வென்று ஸ்ரீ காமாட்சி விளையாட்டுக்கழக அணியினர் மூன்றாமிடத்தை பெற்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X