2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கோலூன்றி பாய்தலில் மகாஜனா கல்லூரி மாணவி சாதனை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி வீராங்கனை ஜெகதீஸ்வரன் அனிதா சாதனை படைத்துள்ளார்.

19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கோலூன்றி பாய்தலில் 3.32 மீற்றர் உயரம் பாய்ந்;து முதலிடம் பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் இருந்த 3.01 மீற்றர் சாதனையை முறியடித்தே அனிதா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அத்துடன், அகில இலங்கை திறந்த போட்டிகளில் படைக்கப்பட்ட சாதனையும் அனிதாவால் முறியடிக்கப்பட்டுள்ளது. திறந்த போட்டிகளில் 3.31 மீற்றர் உயரம் பாய்ந்தமையே சாதனையாக இருந்தது.

அனிதாவின் பயிற்றுவிப்பாளராக மாகாஜனா கல்லூரியில் சின்னையா சுபாஸ்கரன் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .