2025 நவம்பர் 19, புதன்கிழமை

கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

Thipaan   / 2014 ஒக்டோபர் 06 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்று களுமுந்தன்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.

களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மு.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் படுவான்கரைப் பிரதேசத்துக்;குட்பட்ட 9 விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றியிருந்தன.

இறுதிப்போட்டிக்கு அப்பிளாந்துறை கதிரவன் விளையாட்டுக் கழகமும், கோவில்போரதிவு உதயதாரகை விளையாட்டுக் கழகமும் தெரிவாகி 10 இற்கு 25 என்ற புள்ளி வித்தியாசத்தில் அப்பிளாந்துறை கதிரவன் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.

இதில் வெற்றிபெற்ற அணிக்கு களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தால் வெற்றிக் கேடயம் வழங்கி வைக்கப்பட்டது.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X