2025 நவம்பர் 19, புதன்கிழமை

தேசிய மட்ட போட்டிகளில் வடமாகாணம் முன்னேற்றம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான போட்டிகளில் 189 புள்ளிகளை பெற்று வடமாகாணம் ஐந்தாவது இடத்தை பெற்றுக்கொண்டதாக வடமாகாண பிரதி கல்வி பணிப்பாளர் கே.சத்தியபாலன் வியாழக்கிழமை (08) கூறினார்.

தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளின் தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் இம்மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரையில் கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது.

இதில், 9 தங்கங்கள், 9 வெள்ளிகள், 4 வெண்கலப்பதக்கங்கள், 5 வர்ணவிருதுகள் அடங்கலாக 27 பதக்கங்களை வடமாகாணம் சுவீகரித்துக்கொண்டது.

2012 ஆம் ஆண்டு 8 ஆவது இடத்திலிருந்த வடமாகாணம், 2013 ஆம் ஆண்டு 6 ஆவது இடத்தையும் தற்போது இவ்வருடம் (2014) 5 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை பெருமைக்குரிய விடயமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இம்முறை தேசிய மட்டப்போட்டிகளில், 1118 புள்ளிகளை பெற்று மேல்மாகாணம் முதலாம் இடத்தையும், 541 புள்ளிகளை பெற்று வடமேல் மாகாணம் இரண்டாமிடத்தையும், 519 புள்ளிகளை பெற்று சப்பிரகமுவா மாகாணம் மூன்றாமிடத்தையும், 472 புள்ளிகளை பெற்று மத்திய மாகாணம் நான்காவது இடத்தையும் 189 புள்ளிகளை பெற்று  வடமாகாணம் ஐந்தாமிடத்தையும் 178 புள்ளிகளை பெற்று வடமத்திய மாகாணம் ஆறாவது இடத்தையும்  173 புள்ளிகளை பெற்று தென் மாகாணம் ஏழாவது இடத்தையும் 121 புள்ளிகளை பெற்று ஊவா மாகாணம் எட்டாவது இடத்தையும் 52 புள்ளிகளை பெற்று கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X