2025 ஜூலை 09, புதன்கிழமை

புத்தளம் ட்ராகன்ஸ் அணியினருக்கு வரவேற்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


மன்னார் முசலி பிரதேசத்தில் நடைபெற்ற ஹுனைஸ் பாரூக் எம்.பீ.சவால் கிண்ண மென்பந்து கிரிக்கட் போட்டி தொடரில் சம்பியனாக மகுடம் சூடிய புத்தளம் ட்ராகன்ஸ் அணியினருக்கு வியாழக்கிழமை (9) இரவு புத்தளத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த  மென்பந்து கிரிக்கட் போட்டி தொடரானது வியாழக்கிழமை முழு நாளும் மன்னார் முசலி பிரதேச மைதானத்தில் இடம்பெற்றது.

மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் நகரங்களிலிருந்து 48 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன.

8 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இறுதிபோட்டியில் புத்தளம் ட்ராகன்ஸ் அணியும் அகத்தி முறிப்பு நியூ ஜின்னாஹ் அணியும் மோதியதில் புத்தளம் ட்ராகன்ஸ் அணி 6 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

வெற்றி பெற்ற அணியினருக்கு   நகர முதல்வர்  கே.ஏ. பாயிஸ் 'நகர முதல்வர் விருது' வழங்கி கௌரவித்ததோடு துவிச்சக்கர வண்டிகளையும் அன்பளிப்புச் செய்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .