2026 மார்ச் 09, திங்கட்கிழமை

மல்யுத்தப் போட்டியில் வெற்றியடைந்தவர்களுக்கு விருது

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


அகில இலங்கை பாடசாலைகளுக்கான தேசிய விளையாட்டு விழாவில் மல்யுத்தப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (10) மட்டக்களப்பில் நடைபெற்றது.

கல்லடி சிவானந்தா பாடசாலையின் மாணவர்களான 19 வயதுப் பிரிவில் என்.நிசோத், 17 வயதுப்பிரிவில் என்.பிரகாஷ் ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

மகாராஜா கூட்டு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட பிளட்டினம் விருதை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .