2025 ஜூலை 09, புதன்கிழமை

டொப் ஹீரோஸ் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு

Thipaan   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல். அப்துல் அஸீஸ்


கல்முனை டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், டொப் ஹீரோஸ் கழகத்துக்கும் கல்முனை டொப்றேங் விளையாட்டுக்கழத்துக்;கும் இடையில் நேற்று(10) நடைபெறவிருந்த சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திலேயே இப் போட்டி நடைபெறவிருந்தது.

டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர் எம்.எஸ். ஜாபிர்  ஏ. காதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துல்லாஹ் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக்கழகத்தின் செயலாளருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப், ஆகியோருடன் கல்முனை டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கே.எல். சுபைர், டொப்ரேங் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.ஐ. றக்கீப் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .