2025 ஜூலை 09, புதன்கிழமை

திருக்கோவில் உதயசூரியன் அணி சம்பியன்

George   / 2014 ஒக்டோபர் 14 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு


அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில், திருக்கோவில் சுப்பர்ஸ்டார்  விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட அமரர் சீதாராம் தயாகரன் நினைவுக் கிண்ணத்திற்கான உதைப்பந்து சுற்றுப்போட்டியில் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை வென்று சம்பியனானது.

இந்த உதைப்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி நாள் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை(12) திருக்கோவில் சுப்பஸ்டார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த இரண்டு வராங்களாக இடம்பெற்று வந்ததுடன் இதில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 20 உதைப்பந்தாட்டக் கழகங்கள்; பங்கு கொண்டிருந்தன.

இவ் சுற்றுப்போட்டியில் திருக்கோவில் சுப்பர்ஸ்டார் உதைப்பந்தாட்டக் கழகமும் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இறுதி சுற்றுக்கு  தெரிவாகியிருந்தது.

திருக்கோவில் சுப்பர்ஸ்டார் விளையாட்டுக் கழக அணியை திருக்கோவில் உதயசூரியன் அணி ஒரு கோலினால் வெற்றி கொண்டு 2014ஆம் ஆண்டுக்கான அமரர் சீதாராம் தயாகரன் நினைவு உதைப்பந்தாட்ட கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இறுதி போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பக் கல்லூரி  பணிப்பாளர் மற்றும் அரச அதிகாரிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .