2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கல்முனை டொபாசஸ் கழகம் வெற்றி

Kogilavani   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகின்ற மேயர் சவால் கிண்ண கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதலாவது கால் இறுதிப் போட்டியில் கல்முனை டொபாசஸ் கழகம் வெற்றிபெற்றுள்ளது.  

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை(15) இடம்பெற்ற இப்போட்டியில் கல்முனை டொபாசஸ் விளையாடுக் கழகமும் மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகமும் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை டொபாசஸ் கழகம் நான்கு விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை மிஸ்பாஹ் கழகம் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதன் பிரகாரம் கல்முனை டொபாசஸ் கழகம் வெற்றியீட்டி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக கல்முனை டொபாசஸ் கழக வீரர் எச்.எம்.பைசால் தெரிவானார். இவர் 22 பந்துகளை எதிர்கொண்டு 28 ஓட்டங்களை பெற்றதுடன் 4 ஓவர் பந்து வீசி 19 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

மேயர் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டி கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு 16 அணிகள் பங்கேற்றுள்ள இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .