2025 ஜூலை 09, புதன்கிழமை

அகில இலங்கை ரீதியில் நிக்சி சிறந்த வீரராக தெரிவு

Gavitha   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அநுராதபுரத்தில் நடைபெற்று வரும் இலங்கையின் 40ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியின் மென்பந்து கிரிக்கெட் துறையில், அகில இலங்கை ரீதியில் சிறந்த வீரராக நிந்தவூரைச் சேர்ந்த நிக்சி அஹமட் தெரிவாகியுள்ளார்.

இவர் விளையாட்டு அமைச்சினால் திங்கட்கிழமை (27) 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் ஞாபகச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அநுராதபுர விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் மேற்படி போட்டிகளின் கிரிக்கெட் போட்டிகளுக்கான இறுதிநாள் நிகழ்வு பரிசளிப்பிலேயே இவர் தெரிவு செய்யப்பட்டதாக, அம்பாறை மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.அனஸ் அஹமட் தெரிவித்தார்.

இதேவேளை, அண்மையில் 09 மாகாணங்களுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் நிக்சி அஹமட், கிழக்கு மாகாணம் சார்பாக விளையாடி தேசிய போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கு பங்களிப்பு செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .