2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சீனிகம பெண்கள் அணி சம்பியன்

George   / 2014 நவம்பர் 03 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


2014ஆம் ஆண்டுக்கான முரளி ஒற்றுமைக்கிண்ண பெண்களுக்கான இறுதிப்போட்டியில், சீனிகம இணைந்த பாடசாலைகள் பெண்கள் அணி 48 ஓட்டங்களால் பதுளை மகளிர் அணியை வீழ்த்தி சம்பியனாகியது.

8 பெண்கள் அணிகளைக் கொண்ட இந்த சுற்றுப்போட்டிகள், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம், மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மைதானங்களில் நடைபெற்று வந்தன.

பெண்களுக்கான இறுதிப்போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சீனிகம இணைந்த பாடசாலைகள் பெண்கள் அணியும் பதுளை பெண்கள் அணியும் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற சீனிகம அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 15 பந்துப் பரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 93 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் எல்.டி.மெண்டிஸ் 26, என்.நிலானி 16 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

94 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பதுளை பெண்கள் அணிக்கு, ஆரம்பம் முதலே சவால் நிறைந்ததாக இருந்தது.

அவ்வணியின் இலக்குகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட 14.3 பந்துப் பரிமாற்றங்களில் 45 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது. ரி.மதுவந்தி மட்டும் அதிகபட்சமாக 10 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சீனிகம அணி சார்பாக எஸ்.டிசஞ்ஜலி, ஏ.தசுனி ஆகியோர் தலா 3 இலக்குகளை கைப்பற்றினார்கள்.

இறுதிப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக சீனிகம அணியின் எல்.டி.மெண்டிஸ் (26 ஓட்டங்கள், 1 இலக்கு) தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .