2025 ஜூலை 09, புதன்கிழமை

சம்பியனானது சென்றலைட்ஸ் சொக்ஸ் அணி

George   / 2014 நவம்பர் 03 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்திய மின்னல் வேக கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சென்றலைட்ஸ் சொக்ஸ் அணி சம்பியனாகியது.

இந்த சுற்றுப்போட்டியானது யாழ். மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.

இந்த போட்டிகளில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த 8 கழகங்களின் கூடைப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றின.

இறுதிப்போட்;டியில் சென்றலைட்ஸ் சொக்ஸ் அணியை எதிர்த்து பற்றீசியன் கழக அணி மோதியது.

ஆரம்பம் முதல் சென்றலைட்ஸ் சொக்ஸ் அணியின் ஆதிக்கம் மைதானத்தில் நிலைபெற, அவ்வணி 30:24 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று சம்பியனாகியது.

ஒரே நாளில் சுற்றுப்போட்டியை நடத்துவதுடன் இறுதிப்போட்டியையும் அதே தினத்தில் நடத்துவதால் இந்த சுற்றுப்போட்டியை மின்னல் வேக சுற்றுப்போட்டி என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .