2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அமெரிக்கா சென்று வருவதற்கான செலவுப் பணம் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 நவம்பர் 09 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்
,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட வீரர்கள் இருவருக்கு இருவார கால பயணத்தை மேற்கொண்டு அமெரிக்கா சென்று வருவதற்கான செலவுப் பணம்  சனிக்கிழமை (08) வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் நடைபெறவுள்ள கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியைப் பார்வையிடுவதற்காக ரூபாய் 1.2 மில்லியன் சோன் மோகன்ராஜ் மற்றும் சரோன்; சுரேஸ் ரொபட் ஆகியோருக்கு அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே. சிசனினால் இப்பணம் வழங்கப்பட்டது.

புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் இருவர் உட்பட இலங்கையிலிருந்து 6 பேர் அமெரிக்கா செல்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (09) பயணமாகும் இரு வீரர்களுக்குமான பிரயாண ஏற்பாடுகளை அருட்தந்தை மில்லர் நூற்றாண்டு விழாக்குழு மற்றும் சிவில் சமூகம் என்பன இணைந்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .