2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

வெற்றியை தனதாக்கியது புத்தளம் ட்ரகன்ஸ்

George   / 2014 நவம்பர் 25 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையினால் பாணந்துறை நகரில் ஞாயிற்றுக்கிழமை (23) நாடளாவிய ரீதியாக  நடாத்தப்பட்ட அணிக்கு 05 பேர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி தொடரில் புத்தளம் ட்ரகன்ஸ் அணி வெற்றி பெற்று   சம்பியனாகியது.

05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டி தொடரானது பாணந்துறை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தலா இரு அணிகள் வீதமாக மொத்தம் 34 அணிகள் இத்தொடரில் பங்குபற்றின.

இறுதிப்போட்டியில் புத்தளம் ட்ரகன்ஸ் அணி பாணந்துறை அணியை எதிர்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாணந்துறை அணி ஐந்து ஓவர் முடிவில் 03 விக்கட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புத்தளம் ட்ரகன்ஸ் அணி 4.3 ஓவர்களில் 100 ஓட்டங்களை  பெற்று  வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .