2025 நவம்பர் 19, புதன்கிழமை

சாரணர்களுக்கான இருநாள் பயிற்சி பாசறை

George   / 2015 ஜனவரி 13 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளின் சாரணர்களுக்கான இருநாள் பயிற்சிப் பாசறையின் இறுதிநாள் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை(11) முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ இளைஞர் சங்கத்தின் (வை.எம்.சி) நிதிப்பங்களிப்புடன் யாழ். பரியோவன் கல்லூரியின் அனுசரணையில் சாரணர்களுக்கான  பயிற்சி பாசறை, வெள்ளிக்கிழமை(09) ஆரம்பமானது.

இறுதிநாள் நிகழ்வுக்கு வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுதுதுறை அமைச்சர் த.குருகுலராஜா  பிரதம விருந்தினராகவும், தலைமை செயலக சாரண ஆணையாளர்  ந.சௌந்தரராஜன், முல்லைத்தீவுக்கான தலைமை செயலக ஆணையாளர் கமலநாதன், வலயக்கல்விப் பணிப்பாளர் உ.முனீஸ்வரன், பரியோவான் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் ஞானப்பொன்ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி பாசறையில் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட 09 பாடசாலைகள் கலந்து கொண்டதுடன், நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் நிகழ்வுகளிலும் புள்ளி அடிப்படையில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற பாடசாலைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X