2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

யாழ்.மத்தியஸ்தர் சங்க புதிய உறுப்பினர்கள் தெரிவு

George   / 2015 ஜனவரி 19 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்கத்தின் 2015ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

மத்தியஸ்தர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (18) கொக்குவில் மத்திய சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்ற போதே இந்த நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

ஜீ.கோபிகிருஸ்ணா தலைவராகவும், பி.முருகவேள், என்.சிவராசா, கே.சுதாகரன், ஆர்.ஸ்ரீரமணன், ரி.கிருபாகரன் ஆகியோர் உபதலைவர்களாகவும், ரி.றொபேசன் செயலாளராகவும், எஸ்.சிவச்செல்வன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

உறுப்பினர்களாக எம்.சிதம்பரப்பிள்ளை, என்.ரவீந்திரன், வை.குமரேசன், என்.சுதேஷ்குமார், எஸ்.விபுலன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 

கணக்காய்வாளராக என்.நவரத்தினராசா, எம்.முரளி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .