George / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
பிரபல கழகங்களுக்கிடையில் நடை பெறும் டயலொக் கிண்ணத்துக்கான றகர் போட்டியொன்றில் கண்டி கழகம், 66-27 என்ற புள்ளி அடிப்படையில் விமானப்படை கழகத்தை வென்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(15) மாலை கண்டி நித்தவலை றகர் மைதானத்தில் இடம் பெற்ற இப்போட்டியில் முதற் பாதியில் கண்டி கழகம் 33-7 என்ற புள்ளி அடிப்படையில் முன்னிலை வகித்தது.
போட்டி முடிவடையும் போது கண்டி அணி 66 புள்ளிகளையும் விமானப் படை அணி 27 புள்ளிகளையும் பெற்றன.
போட்டி ஆரம்பித்த முதலாவது நிமிடத்தில் கண்டி அணியின் தென்னாபிரிக்க வீரர் கிருஸ்தோபர் குலட் ஒரு ட்ரையை வைக்க அதற்கான மேலதிகப் புள்ளியை ரொசான் வீரரத்ன பெற்றுக் கொடுக்க 7-0 என்ற அடிப்படையில் போட்டி ஆரம்பமானது.
அதனை அடுத்து 10ஆவது நிமிடத்தில் கண்டி அணி மேலும் ஒரு ட்ரையைப் பெற்றது. அதனை கோலாக மாற்ற ரொசான் வீரரத்ன முயற்சித்த போதும் பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பி விட்டது. அதன் காரணமாக 12-0 என்ற நிலையை அடைந்தது.
போட்டியின் 15ஆவது மற்றும் 20ஆவது நிமிடங்களில் கிருஸ்தோபர் குலட் மேலும் ட்ரைகளை வைக்க 22ஆவது நிமிடத்தில் விமானப்படைக்கான முதலாவது ட்ரை பெறப்பட்டு அது கோலாக மாற்றப்படவே இடைவேளையின் போது 33- 7ஆக மாறியது.
இடைவேளையை அடுத்து இரு அணிகளும் மாறி மாறி ட்ரைகளை வைக்க ஆரம்பித்தன.
போட்டி முடிவில் கண்டி அணி 8 கோல்களையும் 2 ட்ரைகளையும் பெற்று மொத்தம் 66 புள்ளிகளைப் பெற்றது. இலங்கை விமானப்படை அணி 3 கோல் 2 பெனல்ட்டி மூலம் 27 புள்ளிகளைப் பெறறது.
கண்டி அணி சார்பாக தென்னாபிரிக்க வீரர் கிருஸ்தோபர் குலட் 3 ட்ரைகளை வைத்ததுடன் மிகத் திறமையாக விளையாடினார்.
அதே நேரம் கண்டி அணியின் பிரபல வீரரான ரோசான் வீரரத்ன 8 ட்ரைகளுக்காக மேலதிகப் புள்ளகளைப் பெற்றுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
16 minute ago
19 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
25 minute ago
31 minute ago