2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

றகர் போட்டியில் கண்டி அணி வெற்றி

Gavitha   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் றகர் போட்டித் தொடரில் மற்றுமொரு போட்டியில் கண்டி அணி வெற்றியீட்டியது.

கண்டி, நித்தவலை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22), இலங்கை இராணுவ அணிக்கும் கண்டி விளையாட்டுக்கழக அணிக்கும் இடையில் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை இராணுவ றகர் அணியை 37-10 என்ற புள்ளி அடிப்படையில் கண்டி அணி வெற்றியீட்டியது.

இடைவேளையின் போது, 18-10 என்ற புள்ளி அடிப்படையில் கண்டி அணி முன்னிலை வகித்தது.

போட்டி ஆரம்பித்து சுமார் 5 நிமிடங்களில் கண்டி அணிக்குக் கிடைத்த பெனல்டியை இலக்குத் தவறாது ரோசான் வீரரத்ன உதைத்து 3 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின் கண்டி அணி எல்லைக் கோடு வரை கொண்டு சென்ற மூன்று முயற்சிகளையும் இறுதிக்கட்டத்தில் இராணுவ அணி தட்டிப் பறித்து தடுத்து நிறுத்தியது. ஒரு சந்தர்ப்பத்தில் கண்டி அணியின் எல்லைக் கோட்டுக்கு சில அடிகள் சமீபமாக இருந்து எதிர் முனைக்கு மிக வேகமாக கைமாற்றி எடுத்துச் சென்றனர்.

அதன் மூலம் மொஹமட் அப்சால் வைத்த ட்ரை மற்றும் மேலதிகப் புள்ளிகளைக் கொண்டு 3-7 என்ற நிலையில் இராணுவ அணி முன்னிலைக்கு வந்தது.

இருந்த போதும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை.  

இடைவேளையின் போது, கண்டி அணி 18- 10 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது. போட்டி முடியும் போது கண்டி அணி 2 பெனல்டி, 3 கோல், 2 ட்ரை மூலம் 37 புள்ளிகளையும் இராணுவ அணி 1 பெனல்டி, 1 கோல் மூலம் 10 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.

கண்டி அணி சார்பாக அனுருத்த வில்லவராய மற்றும் வெளிநாட்டு வீரரான குட்டோ பொன்னி ஆகியோர் திறமையாக விளையாடி ட்ரைகளைப் பெற்றுக்கொடுத்தனர். ரோசான் வீரரத்ன 2 பெனல்டிகள் மற்றும் 3 ட்ரைகளுக்கான மேலதிகப் புள்ளிகள் என்பன மூலம் 12 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார். பெறுமளவு பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். பிரதீப் பெனான்டோ போட்டிக்கு மத்தியஸ்தம் செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .