Gavitha / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்டக்களப்பு திரேசா பெண்கள் பாடசாலையில் நீர் பாவை சிலை திறப்பு விழாவும் வருடாந்த மெய்வல்லுனர் போட்டியும் புதன்கிழமை (25) நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி மாலதி பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
தமிழர்களின் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்ப்பாவை சிலை இங்கு அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் அழைத்து வரப்பட்டதுடன் மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த மெய்வல்லுனர் போட்டியில் இந்த ஆண்டுக்கான சம்பியனாக மரிய அசுந்தா இல்லம் முதலிடத்தை பெற்றுகொண்டதுடன், மரிய கொரட்டி அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

12 minute ago
16 minute ago
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
43 minute ago
3 hours ago