2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி

Sudharshini   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன்

மதுபானம் அருந்திய நிலையில் வருபவர்கள் மைதானத்துள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பொலிஸாரின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி நடைபெறவுள்ளதாக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பிரதி அதிபர் வி.எஸ்.டி.துஸிதரன் தெரிவித்தார்.

வடக்கின் மாபெரும் போரின் ஏற்பாடுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வடக்கின் மாபெரும் போர் எதிர்வரும் மார்ச் மாதம் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறும். இம்முறை போட்டியும் ஏயார்டெல் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும்.

இம்முறை போட்டிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத வகையில் பொலிஸார் பாதுகாப்பு வழங்குவர். மதுபானம் அருந்தியவர்கள், போதைவஸ்து பாவித்தவர்கள் மைதானத்துக்குள் நுழைய முடியாது. போட்டி நடைபெறும் போது மைதானத்துக்குள் எவரும் நுழைய முடியாது.

போட்டி நடைபெறும் போது பாடசாலை சீருடை அணிந்த மாணவர்கள்  வீதிகளில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் கப் கலக்ஸன் என்ற பெயரில் வர்த்தக நிலையங்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் மாணவர்கள் பணம் வசூலித்தல் இம்முறை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இரண்டு கல்லூரிகளின் ஒப்புதலின் அடிப்படையில் போட்டியின் நடுவர் நியமிக்கப்படுவார். போட்டிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாமல், சர்வதேச விதிமுறைகளுக்கமைய விளையாட்டின் புனிதம், பண்பு பேணப்பட்டு போட்டி நடத்தப்படும் என இரண்டு கல்லூரிகளின் அதிபர்களும் ஒப்பமிட்டு அறிக்கை தயாரித்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி போட்டிகள் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .