2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தேசிய பல்கலைக்கழக ஹொக்கி அணியில் யாழ். பல்கலைக்கழக வீராங்கனை

George   / 2015 மார்ச் 02 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்     

இலங்கை பல்கலைக்கழங்களின், இணைந்த ஹொக்கி  அணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வீராங்களை செல்வி. சுபோதினி விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்கல்வி அலகின் பணிப்பாளர் கே.கணேசநாதன், ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தார். 

இந்த வீராங்கனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வருகின்றார். 

இலங்கைப் பல்கலைக்கழக விளையாட்டு சங்கத்தினால் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் இணைந்த ஹொக்கி அணி தெரிவில் இவர் இடம்பிடித்துள்ளார்.

இந்த தெரிவு அணியானது கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் கொழும்பில் நடைபெற்ற சுற்றுப்போட்டியில் விளையாடியது.

யாழ். பல்கலைகழகத்தில் இருந்து மேற்படி அணிக்கு பெண் வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .