George / 2015 மார்ச் 02 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாண மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியுடன் மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் கண்ணகி விளையாட்டுக்கழகம், யாழ்.மாவட்ட தாச்சி அணிகளுக்கிடையில் நடத்திய தாச்சிச் சுற்றுப்போட்டியில் வள்ளுவர் விளையாட்டுக்கழக அணி சம்பியன் ஆகியது.
கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகிய இந்தச் சுற்றுப்போட்டியில் 20 தாச்சி அணிகள் பங்குபற்றின. போட்டிகள் கண்ணகி விளையாட்டுக்கழகத்தில் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை(01) இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வள்ளுவர் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து வைகறை விளையாட்டுக்கழக அணி மோதியது.
போட்டி ஆரம்பித்தவுடன் வைகறை அணி அடுத்தடுத்து இரண்டு பழங்கள் பெற்று முன்னிலையில் இருந்தது. எனினும் தமக்கே உரித்தான பாணியில் லாவகமாக ஆடிய வள்ளுவர் அணி தொடர்ந்து பழங்கள் பெற்று வந்தது.
வள்ளுவர் அணி பழங்கள் பெறுவதை கட்டுப்படுத்த முடியாமல் வைகறை அணியினர் திணறினர். இறுதியில் வள்ளுவர் அணி 7:2 என்ற பழங்கள் அடிப்படையில் வென்றது.
இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த வீரனாக வள்ளுவர் அணியின் மகேந்திரன் விமல் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த தாச்சி அணியாக சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் அணி தெரிவு செய்யப்பட்டது.
வெற்றிபெற்ற அணிக்கான வெற்றிக்கேடயத்தை கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லத் தலைவர் குமரன் பத்மநாதன் (கே.பி) வழங்கினார்
14 minute ago
18 minute ago
45 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
45 minute ago
3 hours ago