Menaka Mookandi / 2015 மார்ச் 06 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
சாவகச்சேரி டிறிபேக் தாரகை விளையாட்டுக்கழகத்துடன் நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 19 வயதுப் பிரிவு அணி 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இரு அணிகளுக்குமிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற சாவகச்சேரி டிறிபேக் தாரகை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் என்.தசிந்தன் 58, எல்.மார்க்சிங் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
184 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி, 26.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் பிரதீபன் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago