Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 09 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஜே.எம்.ஹனீபா
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டி வித்தியாலய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்றது.
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம்.இல்லியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் உள்ளிட்ட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பொற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இப்போட்டி, ஹிக்மா இல்லம் (நீலம்), ஸஹ்றா இல்லம் (மஞ்சள்), இல்மா இல்லம் (பச்சை) ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையில் நடைபெற்றது.
இதில் ஹிக்மா இல்லம் 130 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் இல்மா இல்லம் 127 புள்ளிகளைப் பெற்று இரணடாம் இடத்தையும் ஸஹ்றா இல்லம் 100 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட ஹிக்மா இல்லத்துக்கான வெற்றிக் கிண்ணத்தை மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
9 hours ago
07 Jul 2025