Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 மார்ச் 10 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,ஐ.ஏ.ஸிறாஜ்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்;குட்பட்ட பாலமுனை 2009 கல்விக் குழுவினரால் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவாகியது.
அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக் கழக அணியினரும் அட்டாளைச்சேனை எவடொப் விளையாட்டுக் கழக அணியினரும் மோதிக்கொண்ட இறுதிப்போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை(09) நடைபெற்றது.
ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 07 பேர் கொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற எவடொப் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 04 விக்கெட் இழப்புக்கு 05 ஓவர்களில் 34 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
35 என்ற ஓட்ட இலக்கை பெறுவதற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பைனா அணியினர் 04 ஓவர்களில் குறித்த ஓட்ட இலக்கை அடைந்து சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.
இப்போட்டியின் பரிசு வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக எம்.ஏ சதாத், அதிபர் எஸ்.எம்.எம் ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago