Kanagaraj / 2015 மார்ச் 13 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2015ஆம் ஆண்டுக்கான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனீபாவின் வழிகாட்டலின் கீழ் நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இவ்விளையாட்டுப் போட்டியின் முதல் போட்டியாக கிரிக்கெட் சுற்றுப் போட்டி நாளை 14ஆம் திகதியும், எல்லே சுற்றுப் போட்டி 15ஆம் திகதியும், கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இம்மாதம் 21ஆம் திகதியும், கபடிச் சுற்றுப்போட்டி 22ஆம் திகதியும், உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இம்மாதம் 28ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
கிரிக்கெட் சுற்றுப்போட்டி சின்னப் பாலமுனை சுப்பர் ஓகிட் மைதானத்திலும், எல்லே சுற்றுப்போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்திலும், கரப்பந்து, கபடி, உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திலும் நடைபெறவுள்ளதாகவும் இது தொடர்பாக சகல விளையாட்டுக் கழகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம் றசீன் தெரிவித்தார்.
16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago