George / 2015 மார்ச் 15 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
வடக்கின் மாபெரும் போர் 3 நாள் துடுப்பாட்ட போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு, பதிலடி கொடுக்கும் விதத்தில், ஒருநாள் போட்டியில் 45 ஓட்டங்களால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றிபெற்றது.
வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையில் கடந்த 5ஆம் திகதி முதல் நடைபெற்ற 3 நாட்கள் கொண்ட துடுப்பாட்ட போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 84 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 13ஆவது ஒருநாள் போட்டி சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணித்தலைவர் பத்திநாதன் நிரோஜன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதாக தீர்மானித்தார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம்புகுந்த சதாகரன் திரேசன், சதீஸ் கோமேதகன் ஆகியோர் சிறந்த அடித்தளம் இட்டனர். இருவரும் தலா 50 ஓட்டங்களை கடந்தபோது, சதாகரன் திரேசன் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் சதீஸ் கோமேதகன் 40, சிறிஸ்கந்தராஜா கௌதமன் 26, சில்வஸ்டர் ஜெரோசன் 10 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். மற்றைய வீரர்கள் இரட்டை இலக்கங்களை தாண்டவில்லை.
பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக, ரவீந்திரன் லோகதீஸ்வரன் 8.4 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், கனகரட்ணம் கபில்ராஜ்,வசந்தன் யதுசன், ஜெயக்குமார் கிசாந்துஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் அணி, கென்றிகுலஸ் தீபன்ராஜ்ஜுன் சுழலில் சிக்கித்தவித்தது, 31.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் அமரசேன ஹெர்ஓல்ட் லஷ்கி 20, அருள்நந்தன் கானாமிர்தன் 16, அணித்தலைவர் சஜீந்திரன் கபில்ராஜ் 14, தேவராஜா கஜீபன் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக, கென்றிகுலஸ் தீபன்ராஜ் 9.5 ஓவர்கள் பந்துவீசி 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், சிறிஸ்கந்தராஜா கௌதமன் 2 விக்கெடடுக்களையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கென்றிகுலஸ் தீபன்ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago