2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை சம்பியன்

Thipaan   / 2015 மார்ச் 15 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.அறூஸ்

கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலைக்கும் கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்குமிடையிலான இறுதிப்போட்டி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை(14) நடைபெற்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸாஹிராக் கல்லூரி அணியினர் 5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 31 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை அணியினர் 3.2 பந்துவீச்சு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர்.

இதன் மூலம் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை கிரிக்கெட் அணியினர் மாவட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.பி.மஹ்றூப் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .