Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 மார்ச் 16 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டிகளுக்கு, உத்தியோகபூர்வமான நடுவர்கள் குழாமிலுள்ளவர்கள் நியமிக்கப்படாமல், குறித்த ஒரு கழகத்தின் நடுவர்களை மாத்திரம் கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டிகளின்;போதே, போட்டியின் சட்டதிட்டங்களுக்கு உட்படாது போட்டிகள் நடத்தப்பட்டதாக கராத்தே சம்மேளனத்தினர் தெரிவித்தனர்.
உத்தியோகபூர்வமான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுகின்ற மாணவர்கள் சார்ந்த அணியைச் சேர்ந்தவர்களோ அல்லது அம் மாணவர்களின் பயிற்றுவிப்பாளர்களோ நடுவர்களாக பங்குபற்ற முடியாது என்பது பொதுவான விளையாட்டுச் சட்டங்களாகும்.
கராத்தே விளையாட்டைப் பொறுத்தவரை இந்த சட்ட நடைமுறை ஏனைய பிரதேசங்களில் நடைமுறையில் உள்ளபோதும் மட்டக்களப்பு கல்வி வலயத்தினுள் இதுவரைகாலமும் பின்பற்றப்படவில்லை என சம்மேளனத்தினர் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம், இலங்கை கராத்தே சம்மேளனம் மற்றும் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் ஆகியவற்றுக்கு எழுத்து மூலமான கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் இதுவரையில் எடுக்கவில்லை என கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன தலைவர் டி.எப். அலோசியஸ் தெரிவித்தார்.
Mr. K. Kuhakumararajah Monday, 16 March 2015 12:42 PM
Mr. K. Paskaran ( Zonal Director - Batticaloa zone) has to be blamed for all these.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago