2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மூன்று புதிய கழகங்களுக்கு அனுமதி

George   / 2015 மார்ச் 17 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
 
யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக்கழகங்கள் நடாத்தும் போட்டிகளில் விளையாடுவதற்கு யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 3 புதிய கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சங்கச் செயலாளர் எஸ்.விமலேந்திரன், செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பாசையூர் விம்ஸ், கந்தர்மடம் ரெய்ன்போ மற்றும் சாவகச்சேரி றிபேக் ஆகிய அணிகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் 22 கழகங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. புதிதாக இணையும் அணிகள், பதிவுசெய்யப்பட்ட கழகங்களுடன் சிநேகபூர்வப் போட்டிகளில் விளையாடிய பின்னரே அங்கத்துவம் வழங்கப்படும். 

நடுவர்களின் கட்டணம் அதிகரிப்பு மற்றும் செலவுகள் காரணமாக புதிய அணிகளுடன் சிநேகபூர்வ போட்டிகளில் விளையாடுவதற்கு பதிவு செய்யப்பட்ட அணிகள் முன்வருவதில்லை.

இதனால் புதிய அணிகள் பாதிப்படைகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு சுற்றுப்போட்டிகளில் விளையாடுவதற்கு புதிய அணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் விதிகளுக்கமைய இந்த அணிகள் செயற்பட்டு, போட்டிகளில் தங்கள் திறன்களைக் காட்டவேண்டும் என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .