2025 நவம்பர் 19, புதன்கிழமை

செயலமர்வு

Administrator   / 2015 மார்ச் 20 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

வலயக்க கல்வி அலுவலக விளையாட்டுப்பிரிவு இணைப்பாளர்களுக்கான செயலமர்வு நேற்று(19) கொழும்பு டொரிங்டன் விளையாட்டுத்தொகுதி கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

இரண்டு நாட்களைக் கொண்ட இச்செயலமர்வு இன்றுடன் முடிவடைகின்றது. இலங்கையின் சகல வலயக் கல்வி அலுவலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டு பிரிவு  இணைப்பாளர்கள் இச்செயலமர்வில் கலந்துகொண்டுள்ளனர்.

பாடசாலைகளின்; விளையாட்டு அபிவிருத்திப் பணிப்பாளர் வீ.ஏ.அபேரத்ன செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.

செயலமர்வின் வளவாளர்களாக இலங்கையின் முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சிறியானி குலவன்ஷ மற்றும் மில்ரோய் பெர்னாண்டோ, எம்.குணரட்ன, ரக்பி அபிவிருத்தி பணிப்பாளர் கருணாரத்ன ஆகியார் பங்கேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X